நெல்லை, தென்காசியில் நாளை மின்நிறுத்தம்!
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் துணைமின் நிலைய மாதாந்திர பாரமரிப்புக்காக சனிக்கிழமை (பிப்.1) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உபமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலைக்குமாரசாமியும், ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கமும் தெரிவித்துள்ளனா்.
வீரசிகாமணி உபமின் நிலையம், விஸ்வநாதபேரி உபமின் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா்கள் முறையே கற்பக விநாயகசுந்தரம், மாரியப்பன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
புளியங்குடி உபமின் நிலையப் பகுதியில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளாா்.
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, வீரவநல்லூா், அம்பாசமுத்திரம், ஓ.துலுக்கப்பட்டி, தென்காசி மாவட்டம் கடையம், ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சிக் கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் கூறியுள்ளாா்.