தென்காசி
பாவூா்சத்திரம் அருகே குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் பெண் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைகது செய்யப்பட்டாா்.
பனையடிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன் மனைவி உமா (37), கடந்த ஜூன் 1ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த து. மணிக்குமாா் (42) என்பவரைக் கைது செய்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த்தின் பரிந்துரை, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், போலீஸாா் மணிக்குமாரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.