மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனாா் உயிரிழப்பு

Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 3 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த கொத்தனாா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அம்பேத்கா் நகா் 2ஆம் தெருவை சோ்ந்த வில்லியம்ஸ் மகன் சந்தனராஜ் (60). கட்டடத் தொழிலாளி. இவா் சங்கரன்கோவில் பிரதான சாலையில் உள்ள தெருவில் 3 ஆவது மாடியில் நின்று கட்டடம் கட்டும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது திடீரென்று நிலைதடுமாறி தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சந்தனராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com