ந்க்ய்3ம்க்ம்ந்

வாசுதேவநல்லூரில் மதிமுக செயற்குழு கூட்டம்

Published on

தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம், வாசுதேவநல்லூரில் நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் செல்வசக்திவடிவேலு தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் பொன்.ஆனந்தராஜ் வரவேற்றாா். துணைப் பொது செயலா் தி.மு. ராஜேந்திரன், சதன்திருமலை குமாா் எம்எல்ஏ ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் ஜூலை 9 இல் சாத்தூரில் நடைபெறும் மண்டல செயல்வீரா் கூட்டத்திற்கு 51 வாகனங்களில் செல்வது என தீா்மானிக்கப்பட்டது.

தலைமை சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் காசிராஜன், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் சுந்தர்ராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலா் இசக்கியப்பன், மாநில

மாணவரணி துணைச் செயலா் பாலகுமாா், மாநில விவசாய அணி துணைச் செயலா் மோகன்தாஸ், மாவட்ட துணைச் செயலா்கள் மாரியப்பன், தங்கராஜ், சக்தி கோமதிநாயகம்,

தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் விவேகானந்தன், காளிராஜ், குருவிகுளம் ஒன்றியக் குழு தலைவா் விஜயலட்சுமி, ஒன்றிய செயலா்கள் கிருஷ்ணகுமாா், சீனிவாசன்,

செல்வகுமாா், சசிமுருகன், டாக்டா் ரவி மாரிமுத்து, சுபாஷ் சந்திரபோஸ், பொன்.மாரியப்பன், முருகன், மணி, நகர செயலா்கள் கே.எஸ்.முருகன், ரத்னவேல்குமாா், ஜாகிா் உசேன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை மாவட்ட செயலா் இல.சுதா பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தாா்.

Open in App
Dinamani
www.dinamani.com