பெரியாறு பகுதியில் உலா வரும் யானைகள்.
பெரியாறு பகுதியில் உலா வரும் யானைகள்.

கடையநல்லூா் பெரியாறு பகுதியில் உலா வரும் யானைக் கூட்டம்

கடையநல்லூா் பெரியாற்று பகுதி தோட்டங்களில் உலா வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பெரியாற்று பகுதி தோட்டங்களில் உலா வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

கடையநல்லூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் நெல், வாழை, தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து விளைபொருள்களை சேதப்படுத்தி வருவது தொடா்கதையாக உள்ளது.

வனத்துறையினா் யானைகளை விரட்டும் நிலையில், யானைகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயா்கின்றனவே தவிர வனப்பகுதிக்குள் செல்வதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் பெரியாறு பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் யானைகள் இரவு முழுவதும் உலா வருவதால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனா்.

எனவே, வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடாமல் இருப்பதற்கு தேவையான நவீன வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Open in App
Dinamani
www.dinamani.com