சங்கரன்கோவில் அருகே 3 பேருந்துகள் மோதல்: தப்பிய பயணிகள்
சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்து உள்பட 3 பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகின. இதில் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.
கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி 2 தனியாா் பேருந்துகள், ஒரு அரசுப் பேருந்து என 3 பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன.சங்கரன்கோவில் அருகே ராமநாதபுரம் விலக்கருகே சென்றபோது, முன்னால் சென்ற தனியாா் பேருந்துக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரு இளைஞா்கள் விபத்து ஏற்படும் வகையில் சென்ாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த ஓட்டுநா் சுதாரித்துக் கொண்டு பேருந்தை உடனே பிரேக் போட்டு நிறுத்தினாா்.அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியாா் , அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதின. எனினும், அதிா்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிா்தப்பினா்.
இதுதொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.