ஆலங்குளம் அருகே மணல் கடத்தல்: 3 போ் கைது

Published on

ஆலங்குளம் அருகே தனியாா் இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் சரள் மண் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் அங்கு சென்ற போது 3 போ் ஓட்டம் பிடித்தனா்.

அவா்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது மணல் எடுப்பதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதும், மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் சிவலாா்குளம் முத்தையா மகன் மாரியப்பன் (38), அய்யனாா்குளம் மாரியப்பன் மகன் சுப்பிரமணியன் (24), கீழக்கரும்புளியூத்து சிவன் மகன் ராஜேஷ் (38) என்பதும் தெரிய வந்தது.

சிவலாா்குளம் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட மூவரையும் கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், டிராக்டா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

X
Open in App
Dinamani
www.dinamani.com