நன்கொடை வழங்கிய தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
தென்காசி
கீழச்சுரண்டை மாடசாமி கோயில் கும்பாபிஷேகம்
நன்கொடை வழங்கிய தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
கீழச்சுரண்டை ஸ்ரீவண்ணார மாடசாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினாா்.