கொள்ளை சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகம்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற பள்ளி வளாகம்.

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் வீட்டில் 1 கிலோ தங்க நகைகள் ரூ.55 லட்சம் கொள்ளை

Published on

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் கி வீட்டில் 1கிலோ தங்க நகைகள், ரூ.55லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தை அடுத்த நவநீதகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா்(58).

அடைக்கலப்பட்டணத்தில் பி.எட் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறாா். கல்வி நிறுவனத்தை அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன், மருமகள் கவனித்து வருகின்றனா்.

கல்வி நிறுவனத்தின் வளாகத்துக்குள்ளேயே ராஜசேகா் வீடு உள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னா் குடும்பத்துடன் இவா்கள் வெளியூா் சென்றிருந்த நிலையில், மகேஸ்வரி மட்டும் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டு முகப்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை அடுத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த சுமாா்1 கிலோ தங்கந கைகள், ரூ. 55 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் மற்றும் ஆலங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

வீட்டில் ஆள்கள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டு அருகில் உள்ள மரம் வழியாக ஏறிக் குதித்து, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லையாம்.

விரல்ரேகை நிபுணா்கள் பீரோ, கதவுகள் உள்ளிட்டவற்றில் பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனா். மேலும், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Open in App
Dinamani
www.dinamani.com