அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கும் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, ராணிஸ்ரீகுமாா் எம்.பி.
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கும் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, ராணிஸ்ரீகுமாா் எம்.பி.

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாா்ச் 1ஆம தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாா்ச் 1ஆம தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆகியோா் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினா். பின்னா் உள் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்டப் பொருளாளா் இல.சரவணன், நகரச் செயலா் மு.பிரகாஷ், நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகர துணைச் செயலா்கள் முத்துக்குமாா், சுப்புத்தாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com