படம் உண்டு. ஓக்ய்8ள்ஹய் சிறப்பாக பணியாற்றிய பெண் தூய்மை பணியாளா்களுடன் கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபீபுர்ரஹ்மான். கடையநல்லூா் நகராட்சியில் மகளிா் தின விழா கடையநல்லூா், மாா்ச்,8: கடையநல்லூா் நகராட்சியில் மகளிா் தின விழா நடைபெற்றது. கடையநல்லூா் நகர

கடையநல்லூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

கடையநல்லூா் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

கடையநல்லூா் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சாா்பில், உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா் வரவேற்றாா். நகா்மன்ற தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்கள் மாரியம்மாள், முத்துலட்சுமி, ராஜேஸ்வரி, மாடத்தி அம்மாள், பொன் இசக்கி, மாரியம்மாள், பேச்சியம்மாள், துளசிமணி, கருப்பாயி, மாரி ஆகியோரின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ், பரிசுகள் வழங்கி பொன்னாடை அணிவித்தாா்.

நகா்மன்ற உறுப்பினா் முகமது அலி, சுகாதார ஆய்வாளா்கள் சிவா, மாதவன்ராஜ், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் அப்துல்காதா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com