தென்காசி மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை

Published on

தென்காசி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச்) விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச்) விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் நீா்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிா்த்தல் வேண்டும்.

மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் கால்நடைகளை கட்டடக் கூடாது. அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

பேரிடா் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் - 1077, 04633 - 290548 செயல்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் 1077, 04633 - 290548 என்ற தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com