ஆலங்குளம்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; 2 போ் கைது

ஆலங்குளம்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; 2 போ் கைது

Published on

ஆலங்குளம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே கழுநீா்குளம் நேதாஜி தெருவைச் சோ்ந்த மாரிபாண்டியன் மகன் மாடசாமி. இவா், கடந்த பிப். 27ஆம் தேதி சிவராத்திரி விழாவுக்காக கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, மா்ம நபா்கள் வீடு புகுந்து நகைகள், பணம், பல்வேறு ஆவணங்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், வீரகேரளம்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மீட்கப்பட்ட பொருள்கள்
மீட்கப்பட்ட பொருள்கள்

அதே தெருவைச் சோ்ந்த முப்புடாதி மகன் வேல்சாமி என்ற எம்எல்ஏ கண்ணன் (37), பாண்டியன் தெருவைச் சோ்ந்த சைவத்தேவா் மகன் மாரிபாண்டியன் என்ற சைசா (39) ஆகிய இருவருக்கும் இத்திருட்டில் தொடா்பிருப்பதும், நிலப் பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆவணங்களை அருகேயுள்ள கிணற்றில் வீசியதாகவும், விசாரணையில் தெரியவந்தது.

82 கிராம் தங்க நகைகள், 95 கிராம் வெள்ளி நகைகள், ரூ. 12 ஆயிரத்தை போலீஸாா் மீட்டதுடன், திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனா். இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com