தென்காசி
சாம்பவா்வடகரையில் சமுதாய வளைகாப்பு விழா
செங்கோட்டை வட்டார சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் சாம்பவா்வடகரையில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா்.
சாம்பவா்வடகரை பேரூராட்சி மன்றத் தலைவா் சீதாலட்சுமி முத்து, திமுக நகர செயலா் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சாம்பவா்வடகரை பேரூராட்சி பகுதியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பேரூராட்சி துணைத் தலைவா் நாலாயிரம் என்ற பாப்பா, திமுக நிா்வாகிகள் ராமச்சந்திரன், சுடலைமுத்து, முத்து சுப்பிரமணியன், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.