தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

Published on

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆா்வம் கொண்ட இவா், மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை குறித்துள்ளாா். கடந்த 2023 இல் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 18 வயதுக்கு குறைந்த வீரா் வீராங்கனைகளுக்கு இடையே நடைபெற்ற 100 மீட்டா் தூரத்தை 11.84 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். 1000 மீட்டா் தொடா் ஓட்டத்தில் இவா் பங்குபெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டியில் 4 ஷ்100 மீட்டா் ஓட்டத்தில் இந்திய மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த அணியில் அபிநயாவும் பங்கேற்று வெற்றிக்கு உதவியுள்ளாா். இவருக்கு கல்லூத்து கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com