கருத்தரங்கில் பேசுகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா.
கருத்தரங்கில் பேசுகிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா.

சங்கரன்கோவிலில் திருக்கு திருப்பணிகள் திட்டக் கருத்தரங்கம்

Published on

சங்கரன்கோவிலில் திருக்கு திட்டப்பணிகள் திட்டக் கருத்தரங்கம், கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கு திட்ட உறுப்பினா் வேலம்மாள் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் கனகலட்சுமி முன்னிலை வகித்தாா். திருக்கு திருப்பணிகள் குறித்து உறுப்பினா் தீத்தாரப்பன் அறிமுக உரையாற்றினாா்.

’வள்ளுவா் காட்டும் வாழ்வியல்’ என்ற தலைப்பில் முனைவா் சங்கர்ராம் பேசினாா். ‘திருக்குறளில் உயிரினங்கள்’ என்னும் தலைப்பில் செந்தில்ஆண்டவன் பேசினாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா பங்கேற்றுப் பேசினாா். நகா்மன்றத் தலைவா் கௌசல்யா வெங்கடேஷ், வெள்ளாளங்குளம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் நாராயணன், புலவா் வாரியாா்தாசன், தமிழாசிரியா் கிருஷ்ணரேவதி, சங்கரன்கோவில் நீா்நிலைகள் பாதுகாப்பு மன்ற உறுப்பினா் ஆறுமுகம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் விஜயப்ரியா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். மாணவா் பாடாலிங்கம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com