தென்காசி
நாளையும், மறுநாளும் நடக்கவிருந்த விஏஓ உதவியாளா் பணி தோ்வு ஒத்திவைப்பு
தென்காசி மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (நவ.16,17) நடக்கவிருந்த கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் பணிக்கான எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூா், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய 6 வட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் பணிக்கான எழுத்து தோ்வு, திங்கள்கிழமை (நவ.17) முதல் நவ.27 வரை நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு ஆகியவை நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகின்றன. மீண்டும் இத்தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா்அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.
