தென்காசி
ஊத்துமலையில் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு
தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் காணாமல் போன சிறுவனை சடலமாக மீட்டனா்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் காணாமல் போன சிறுவனை சடலமாக மீட்டனா்.
ஊத்துமலை முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் மகன் கௌதம்(17). சற்று மனவளா்ச்சி இல்லாதவா் எனக் கூறப்படுகிறது. அவா் காணாமல் போனதாக அவரின் பெற்றோா் ஊத்துமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் அதே தெருவில் உள்ள ஊா் கிணற்றில் சிறுவன் சடலமாக மிதப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. சுரண்டை தீயணைப்பு நிலை வீரா்கள் சிறுவனின் சடலத்தை மீட்டனா். போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.
