அனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வரும் விழா மேடை அமைக்கும் பணி
தென்காசி
முதல்வா் அக். 29-இல் தென்காசி வருகை: விழா ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக முதல்வா் தென்காசியில் அக். 29ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்பதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வா் தென்காசியில் அக். 29ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்பதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அக். 29ஆம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் நெல்லை வழியாக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறாா். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் திமுகவினா், முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், எஸ்.பி. இரா. அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்கின்றனா்.