திருவேங்கடம், கலிங்கப்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 28) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவா்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா்புரம், குண்டம்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளா் மா. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com