கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்: தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் என்று  தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 
கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்: தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் என்று மக்களவை திமுக உறுப்பினரும் எழுத்தாளருமான  தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் கல்விச் சிந்தனை அரங்கு இரண்டாவது நாளாக இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுத் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: 

'நமது கலாசாரம், இனம் குறித்து நாம் எப்போதும் பெருமை கொள்வோம். நான் தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன். தற்போதைய இந்தியா, பிரிந்துகிடப்பதாக நான் உணர்கிறேன். மதத்தின் பெயரால் இந்தியா சிதைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். 

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியபோது, அதை முதலில் எதிர்த்தது நாங்கள்தான். தற்போது நீட் தேர்வால் தமிழகம் பாதிக்கப்படுகிறது. இது சமூக அநீதியாகும். இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம்.

திமுகவில் இருந்து 40 எம்பி-க்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளதன் மூலம் தமிழக மக்கள் வலுவான ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். தமிழகம் எதற்கும் இரையாகாது. நான் தமிழகத்தின் பிரதிநிதியாக இருக்கிறேன். பெரியார் மண்ணில் இருந்து வந்திருப்பதால் கூட்டாட்சியின் குரலாக ஒலிப்பேன். எங்களுக்கு சமூக நீதிதான் முக்கியம்.

மதச்சார்பின்மை, ஜனநாயகம், அரசியலமைப்பு இவற்றுக்காக 50, 55 ஆண்டுகளாக உழைக்கிறோம். கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு மதிப்பளிக்க விரும்புகிறோம். எதிர்க்கருத்தைப் பதிவிட்டால் தேசவிரோதிகள் என முத்திரை குத்துகிறார்கள். ஆனால் உண்மையிலேயே நாங்கள்தான் தேசப்பற்றாளர்கள். வங்கதேச போருக்கு முதல் மாநிலமாக நிதி வழங்கியது தமிழகம்தான். 

இங்கு கலைஞர்களுக்குக் கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை. கௌரி லங்கேஷ், தல்வால்கர் ஆகியோருக்கு நடந்ததைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அனைவருக்கும் கேள்வி எழுப்பு உரிமை இங்கு இருக்கிறது. இது மிகவும் கடினமான போர். தமிழக நலன் மற்றும் உரிமைக்காகக் குரல் எழுப்புவோம்" என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com