'பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது' - சசிதரூர்

பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்தார். 
'பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது' - சசிதரூர்

பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்தார். 

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

இன்றைய முதல்நாள் அமர்வில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், 

'இந்து மதம் என்பது சகிப்புத்தன்மை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் தனிப்பட்ட உண்மையையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. 

ஹிந்தி மொழித் திணிப்பு என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மொழித் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்ற கொள்கையே சரியானது. 

தனிப்பட்ட வாழ்க்கைக்கு உதவும் என்றால் வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம். மாறாக, வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை . 

வட மாநிலங்களில் உள்ள பள்ளிகள், தென்மாநில மொழிகளை கற்றுக்கொடுப்பதில்லை. ஆனால் தென் மாநிலங்களில் பெரும்பாலாக ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழிகளைக் கற்றுக்கொடுக்கின்றனர். 

ஹிந்தி புகுத்தப்படுவதால் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் மட்டும் அனைத்து விதத்திலும் வளர்ச்சி அடைகிறார்கள்.

இந்தியாவில் 90% பேர் மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள். இங்கு இடம் கிடைக்காமல் பலர் வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க ஒருவருக்கு ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் வரை செலவாகிறது. 

இந்தியாவில் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட ஒரு சில பள்ளிகளில் மட்டும்தான் கடுமையான பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். மற்ற பள்ளிகளில் மாநிலக் கல்வித்திட்டமே தொடர்கிறது. 

இன்றைய மாணவர்களுக்கு நான் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கடின உழைப்பை நம்புங்கள். நான் எந்தவொரு பரிந்துரையும் இல்லாமல் மெரிட்டில் படித்தேன். கடுமையான உழைப்புடன் பயிற்சி இருந்தால் பரிந்துரை இல்லாமல் வெற்றி பெறலாம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். 

அதுபோல பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. பிள்ளைகள் அவர்களின் கனவுகளை நோக்கி பயணிக்க பெற்றோர் அனுமதிக்க வேண்டும் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com