'வெப்பமான காலநிலையில் தாமரை மலராது' - திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேச்சு

வெப்பமான காலநிலையில்(தமிழகத்தில்) தாமரை மலராது என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 
'வெப்பமான காலநிலையில் தாமரை மலராது' - திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேச்சு

வெப்பமான காலநிலையில்(தமிழகத்தில்) தாமரை மலராது என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் பேராசிரியருமான கௌரவ் வல்லப், பாஜக செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான சுதன்ஷு திரிவேதி ஆகியோர் 'செயல்பாட்டில் பன்முகத்தன்மை: கல்விக்கு முக்கியத்துவம்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதனை தொடங்கிவைத்துப் பேசிய சுதன்ஷு திரிவேதி, 'தேசியக் கல்விக் கொள்கைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். மேலும் கல்வியில் பன்முக அணுகுமுறையை கொண்டு வந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை எதுவும் இல்லை. ஏப்ரல் 7, 1823 இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில், சென்னை மாகாணத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது . இது லண்டனில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. கல்வியறிவு விகிதம் சுமார் 96 முதல் 97 சதவீதமாக இருந்தது. 6000-க்கும் மேற்பட்ட மாணவர்களில் 4,888 மாணவர்கள் சூத்திரர்களாக இருந்தனர். திராவிடம் என்பது தமிழ் வார்த்தை. அது சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது' என்றார். 

இதற்குப் பதில் அளித்த சரவணன் அண்ணாதுரை, 'பாஜக செய்தித் தொடர்பாளர் கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளார். இன்னும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு வரவில்லை. 

தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு தொழில்சார் கல்வி வழங்குவதில் நாங்கள் கவலைப்படுகிறோம். கடந்த 50 ஆண்டுகளில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நாங்கள் பெற்றுள்ளோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள், மருத்துவம் கற்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். நீதிக்கட்சி அதை ஒழித்தது. அந்தவகையில் நீதிக்கட்சியினர் திராவிட முன்னோடிகள்.

பள்ளிக் கல்வியை கட்டாயமாக்கி அரசாணை கொண்டு வந்தோம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சூத்திரர்களுக்கும் நாங்கள் அதை உறுதி செய்துள்ளோம்.

எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் சேர்க்கையை மேம்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசால் தொடங்கப்பட்ட பெண்களின்  இடைநிலைக் கல்விக்கான தேசிய ஊக்குவிப்புத் திட்டத்தை பாஜக அரசு  நிறுத்தியது. 

கலிபோர்னியா போன்ற காலநிலை பெங்களூருவில் இருப்பதால்தான் அங்கு மைக்ரோசாப்ட் அலுவலகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அமைக்கப்படாததற்கு வெப்பமான காலநிலையை காரணமாகும். வெப்பமான காலநிலையில்(தமிழகத்தில்) தாமரை மலராது' என்று தெரிவித்தார். 

பின்னர் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப், 'இன, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை மறந்துவிடுங்கள். இப்போது டிஜிட்டல் பாகுபாடு என்பதுதான் அதிகம் இருக்கிறது. 20% பள்ளிகள் மட்டுமே குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குகின்றன. எத்தனை பேருக்கு இன்னும் இணையவசதி இல்லை. தேசிய கல்விக்கொள்கை டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கிறது' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com