தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்குகிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு


சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்குகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெறும் 10-வது கல்விச் சிந்தனை அரங்கை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தொடக்கி வைக்கிறார். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் க. பொன்முடி ஆகியோர் இன்று சிறப்புரையாற்றவிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில், மத்திய, மாநில அமைச்சா்கள், கல்வியாளா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனா். 

சென்னை கிராண்ட் சோழாவில் இன்று தொடங்கவிருக்கும் கல்விச் சிந்தனை அரங்கில் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், கர்நாடக மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் அஷ்வத்நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

மேலும் தற்போதைய கல்வி முறை, புதியக் கல்விக் கொள்கை உள்பட பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் அமா்வுகளில் துறை சாா்ந்த வல்லுநா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்த மாநாடு மார்ச்  8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நேரேடியாகப் பங்கேற்கவும், இணையவழியில் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com