'இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் உக்ரைன் போர்' - தலைமைப் பொருளாதார ஆலோசகர்

ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கையை சமாளிக்க நாடு தயாராகி வரும் நிலையில் உக்ரைன் போர், பிரச்னையை மேலும் மோசமாக்கியுள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர், வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
'இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் உக்ரைன் போர்' - தலைமைப் பொருளாதார ஆலோசகர்

தொற்றுநோய் மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கையை சமாளிக்க நாடு தயாராகி வரும் நிலையில் உக்ரைன் போர், பிரச்னையை மேலும் மோசமாக்கியுள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர், வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில், தலைமைப் பொருளாதார ஆலோசகர், வி. அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது:

கடந்த இரண்டு ஆண்டு கரோனா காலத்தில் ஒரு நாடும் அதன் குடிமக்களும் எதிர்கொண்ட சிரமங்களில் சமநிலையைப் பேணுவதில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா நியாயமான முறையில் சவாலை எதிர்கொண்டுள்ளது. ஆனால் திறன் மற்றும் கல்வியின் அடிப்படையில் தொற்றுநோய் ஏற்படுத்தி விட்டுச்சென்ற சவால்கள் கவனிக்கப்பட வேண்டியது. 

குறிப்பாக பள்ளி மூடல் மற்றும் டிஜிட்டல் கல்வி காரணமாக கல்வி இடைநிற்றல், பணி நிறுத்தம் ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

முதலீட்டுச் செலவு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வருமானம் அதிகரிப்பு ஆகியவைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டு துறைகளில் முழு திறனை உணர்ந்துகொள்வதே மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். கற்றல் இடைவெளியைக் குறைக்க அரசு முன்னோக்கிச் செயல்பட்டால், அதுவே முன்னேற்றத்திற்கான ஒரு சாத்தியமான வழி. 

பொருளாதாரம் மேம்பாடு அடைய தொலைநோக்குப் பார்வை வேண்டும். பொருளாதார மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைப்  பெற நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் ஒரு அங்கம் மட்டுமே. விவசாயிகள் தங்கள் பொருள்களை எந்தவழியிலும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். நிலம், நிலத்தடி நீர் குறைவு, விவசாயப் பொருள்கள் கொள்முதல் என ஒரு சில விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பயிர்க் காப்பீடு உள்ளிட்ட விவசாயிகளின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com