‘நீட் வந்தபிறகு தனியார் கல்லூரிகளில் 600% கட்டணம் அதிகரிப்பு’: மணீஷ் திவாரி

நீட் தேர்வு வந்தபிறகு தனியார் கல்லூரிகளில் 600 சதவிகிதம் கட்டணம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.
மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி
மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி

நீட் தேர்வு வந்தபிறகு தனியார் கல்லூரிகளில் 600 சதவிகிதம் கட்டணம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாம் நாள் அமர்வில் மணீஷ் திவாரி கலந்துகொண்டார். இந்த அமர்வில் "உக்ரைனிற்கு பிந்தைய உலகம்: இந்திய மாணவர்களின் அடுத்து நிலை" என்ற தலைப்பில் அவர் விரிவாகப் பேசினார்.

மணீஷ் திவாரி பேசியதாவது:

“உக்ரைனிலிருந்து 20,000 மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை முன்னதாகவே மத்திய அரசு செய்திருக்க வேண்டும்.

நீட் தேர்வு என்பது ஆழமான குறைபாட்டிற்கான உதாரணம். 80 ஆயிரம் மருத்துவ இளநிலை இடங்களுக்கு 2021ஆம் ஆண்டு 8 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றார்கள். இதன்மூலம், தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேரும் நிலையை உருவாகியுள்ளனர். 

அதிக கட்டணம் செலுத்தி படிக்க வைக்க முடியாத பெற்றோர்கள் கட்டணம் குறைவாக உள்ள உக்ரைன், ரஷியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்க வைக்கின்றனர்.

தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் தவறான முன்னுதாரனத்தை நீட் ஊக்குவிக்கிறது.

நீட் வந்தபிறகு தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத் தொகை 600 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் 5-இல் ஒரு பங்கு மாணவர்கள் உக்ரைனிலிருந்து வந்துள்ளார்கள். ஆகையால், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் மீண்டும் உக்ரைனிற்குதான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com