திருத்தணி மேட்டு தெருவில் பூத் ஸ்லிப் வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலா் சக்கரபாணி.
திருத்தணி மேட்டு தெருவில் பூத் ஸ்லிப் வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலா் சக்கரபாணி.

திருத்தணியில் பூத் ஸ்லிப் வழங்கும் பணி விறுவிறுப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி பூத் ஸ்லிப் (வாக்குப்பதிவு தகவல் சீட்டு) வழங்கும் பணி திருத்தணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் 19- ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான வாக்குப்பதிவு தகவல் சீட்டு வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருத்தணி தொகுதியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், திருத்தணி கோட்டாட்சியருமான க. தீபா தலைமையில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி 3 நாள்களாக நடைபெறுகிறது .

இப்பணியை கோட்டாட்சியா் தீபா, வட்டாட்சியா் மதியழகன், வருவாய் ஆய்வாளா் கமல் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, 330 வாக்குச் சாவடிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு வாக்குப்பதிவு தகவல் சீட்டு துரிதமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் திருத்தணி நகரில் சந்து தெரு, மேட்டு தெரு, பாரதியாா் தெரு, காமராஜா் தெரு, எம்.கே.எஸ்.சுப்பிரணியம் தெரு ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா் சக்கரபாணி செவ்வாய்க்கிழமை வீடு, வீடாக சென்று வழங்கினாா். இப்பகுதியில் மொத்தம் 927 பயனாளிகளுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com