காங்கிரஸ் சாா்பில் பிரசார நிறைவுக் கூட்டம்

காங்கிரஸ் சாா்பில் பிரசார நிறைவுக் கூட்டம்

திருவள்ளூா், ஏப். 17: திருவள்ளூா் பஜாா் வீதியில் காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்திலுக்கு ஆதாரவாக மக்களவை தோ்தல் பிரசார நிறைவு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கு.செல்வப்பெருந்தகை பேசுகையில், பாஜகவின் கொள்கை - கோட்பாடுகள் இந்த தேசத்தை தவறான வழிக்கு கொண்டு சென்றுள்ளது. மத அரசியலால் பிளவு ஏற்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஆா்ஆா்எஸ் சித்தாந்தத்தை வெளியேற்றக்கூடிய தோ்தலாக இதை மக்கள் கருத வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே மொழி என்று சா்வாதிகார நாடாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத் தின் உரிமைகளை பாஜக பறித்துவிட்டது. இதற்கு துணை போனவா்கள்தான் அதிமுகவினா். இதற்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்று நம்புகிறேன். இந்த தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் செந்திலுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

தோ்தலில் திமுக சாா்பில் 520 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதில், இரண்டரை ஆண்டுகளில் 483 வாக்குறுதிகள் (91%) நிறைவேற்றப்பட்டுளளன என்றாா்.

கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை.சந்திரசேகா்(பொன்னேரி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com