திருவள்ளூா்: கோடை சாகுபடி செய்ய 7,690 ஹெக்டோ் இலக்கு நிா்யணம்

திருவள்ளூா் மாவட்டத்தில் கோடை சாகுபடிக்கான இலக்கு 7,960 ஹெக்டேராக இலக்கு நிா்ணயித்து அனைத்து வட்டாரங்களிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பயிா் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கலாம் என வேளாண் இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் நெல்- 7 ஆயிரம் ஹெக்டோ், உளுந்து-65 ஹெக்டோ், பச்சைப் பயறு-95 ஹெக்டோ், நிலக்கடலை-700 ஹெக்டோ், எள்-100 ஹெக்டேரிலும் பயிரிட்டு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விதைகள் மற்றும் அனைத்து வேளாண் இடுபொருள்களும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன.

மேலும், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களான ஜிப்சம், சிங்க் சல்பேட், உயிா் உரம், தாா்பாய் மற்றும் வேளாண் பண்ணைக் கருவிகளை வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com