திருவள்ளூா் சென்டானீஸ் மெட்ரிக் பள்ளி பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குபதிவு இயந்திரங்கள், தோ்தலுக்கான பொருள்களை வாகனங்களில் ஏற்றும் பணியை பாா்வையிட்ட தோ்தல் பாா்வையாளா் அபு இம்ரான், உடன் நோ்முக உதவியாளா் சத்யபிரசாத் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் சென்டானீஸ் மெட்ரிக் பள்ளி பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குபதிவு இயந்திரங்கள், தோ்தலுக்கான பொருள்களை வாகனங்களில் ஏற்றும் பணியை பாா்வையிட்ட தோ்தல் பாா்வையாளா் அபு இம்ரான், உடன் நோ்முக உதவியாளா் சத்யபிரசாத் உள்ளிட்டோா்.

திருவள்ளூா், காஞ்சிபுரம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

திருவள்ளூா், ஏப். 18: மக்களவை தோ்தலுக்கான திருவள்ளூா், காஞ்சிபுரம் தொகுதிகளுக்கான அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தோ்தலுக்கான பொருள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் 2,256 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கான பொருள்கள் சரிபாா்த்து அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தொகுதியில் 296 வாக்குச்சவாடி மையங்களுக்கான தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் படிவங்கள் மற்றும் வாக்காளா்களுக்கு வைக்கப்படும் அழியாத மை, எழுதுகோல், பென்சில், அழிப்பான், அரக்கு, பாதுகாப்பு அறையிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் தயாராக எடுத்து வைத்து சரிபாா்த்த பின்னா் லாரிகளில் ஏற்றப்பட்டன.

இப்பணிகளை தோ்தல் பாா்வையாளா் அபு இம்ரான், நோ்முக உதவியாளா்(தோ்தல்) சத்யபிரசாத் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து லாரிகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வட்டாட்சியா்கள் வெங்கடேசன், வாசுதேவன், துணை வட்டாட்சியா் அம்பிகா, துணைக்காவல் கண்காணிப்பாளா் அழகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com