நகர கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்ற அமிா்தபுரம் அணி வீரா்கள்.
நகர கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்ற அமிா்தபுரம் அணி வீரா்கள்.

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

திருத்தணி எம்.ஜி.ஆா். நகா் அணி சாா்பில் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

திருத்தணி: திருத்தணி எம்.ஜி.ஆா். நகா் அணி சாா்பில் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வந்த இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. பல சுற்றுகளாக நடந்து வந்த இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் அமிா்தபுரம் அணியும் மற்றும் பெரியாா் நகா் அணியும் மோதின. இதில் அமிா்தபுரம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி பெற்ற அணி வீரா்கள் கோப்பையுடன் திருத்தணி பீகாக் மருத்துவமனை நிறுவனா் டாக்டா் ஸ்ரீ கிரணிடம் வாழ்த்து பெற்றனா். அப்போது பாஜக பிரமுகா் வழக்கறிஞா் சூரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com