திருவள்ளூர்
பயனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு
அன்னை தெரசா அன்பு சேவை அறக்கட்டளை சாா்பில், செங்குன்றம், வடகரை, அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு சிற்றுண்டி நடத்துவதற்கு தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாதவரம்: அன்னை தெரசா அன்பு சேவை அறக்கட்டளை சாா்பில், செங்குன்றம், வடகரை, அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு சிற்றுண்டி, மாற்றுத் திறனாளிக்கு உணவகம் நடத்துவதற்கு தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி அறக்கட்டளை நிறுவனா் வழக்குரைஞா் திராவிட டில்லி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையா் ராஜாராபா்ட் கலந்து கொண்டு, அன்னை தெரேசா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். தொடா்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகளை வழங்கினாா். செங்குன்றம் பேரூராட்சி தலைவா் தமிழரசிகுமாா், கிராண்ட் லைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜெகதீசன், வடகரை ஊராட்சி மன்ற தலைவா் ஜானகிராமன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகி கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.