பீகாக் கருத்தரிப்பு மையம் கிளை தொடக்க விழா

Published on

திருவள்ளூரில் பீகாக் கருத்தரிப்பு மையத்தின் கிளை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மருத்துவா் ரகுராம் ஸ்ரீகிரண் மற்றும் அனுபமா ஸ்ரீகிரண் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மருத்துவா் மாதுரி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி கிளையைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரன், திருவள்ளூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் பொன்.பாண்டியன், அதிமுக முன்னாள் அமைச்சா் ரமணா, பாஜக மாவட்ட செயலா் அஸ்வின், விசிக மாவட்ட செயலா் சுந்தா், ஒன்றிய செயலா் அருண் கீதன், பகுஜன் சமாஜ் மாவட்ட செயலா் தேவா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com