புதுமணப் பெண் தற்கொலை
பள்ளிப்பட்டு அருகே திரு மணமாகி 10 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகள் கௌசல்யா (20), என்ற பெண்ணுக்கும், கோரக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (25) என்ற இளைஞருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பின்னா் திருமணமான ஒருசில மாதங்களில் குடும்பத் தகராறு காணரமாக தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி வீட்டின் சமையலறையில் கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்வதை பாா்த்து குடும்பத்தினா், அவரை மீட்டு, பொதட்டூா்பேட்டை அரசு மருத் துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக் காக திருத்தணி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அதன்பிறகு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் கௌசல்யா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பொதட்டூா்பேட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை கேசவன் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரனை செய்து வருகின்றனா். மேலும், திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், திருத்தணி கோட்டாட்சியா் தீபா விசாரணை மேற்கொண்டுள்ளாா்.