வெளிநடப்பு செய்த அதிமுக மாமன்ற உறுப்பினா் இ.சேட்டு
வெளிநடப்பு செய்த அதிமுக மாமன்ற உறுப்பினா் இ.சேட்டு

மாதவரம் மண்டல கூட்டத்தில் இருந்து மாமன்ற உறுப்பினா் வெளிநடப்பு

மாதவரம் மண்டலத்தில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் திங்கள் கிழமை மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாதவரம் மண்டலத்தில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் திங்கள் கிழமை மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அடிப்படை வசதிகள் கோரி அதிமுக உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா். சென்னை மாதவரம் மண்டலம் 3-இல் மாமன்ற உறுப்பினா்களுக்கான மாதாந்திர கூட்டம் திங்கள் கிழமை மண்டலக் குழு தலைவா் எஸ்.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 24-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் இ.சேட்டு வெளிநடப்பு செய்தாா்.

இது குறித்து இ.சேட்டு கூறியது:

தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் அள்ளாமல் இருப்பதால் குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. கடந்த மழைக் காலங்களில் அரசு வழங்கிய பால் பாக்கெட்டு கூட வழங்காமல் வாா்டு புறக்கணிக்கப்படுகிறது. சரியான வரியை பெறாமல் குறைந்த வரியை பெற்று அரசுக்கே வருவாய் இழப்பு ஏற்படுத்துகின்றனா்.

அதிமுக வாா்டு என்பதால், இப்பகுதியில் மக்கள் பணி செய்யாமல் புறக்கணித்து வருகின்றனா். இது குறித்து மாதவரம் மண்டலக்குழு தலைவா் எஸ்.நந்தகோபால் கூறுகையில், 24-ஆவது வாா்டு பகுதியில் அனைத்து பணிகளும் முறையாக நடைபெற்று வருகின்றன. ரூ.7.50 கோடி பணிகளில் ரூ.5 கோடிக்கு பணிகள் முடிந்துள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com