ஆரணி  பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக் கடையை அகற்றக்கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள்.  
ஆரணி  பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக் கடையை அகற்றக்கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள்.  

ஆரணியில் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

ஆரணி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்

ஆரணி பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து திருவள்ளூா் சமூக ஆா்வலா் சேஷாத்ரி தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் த.பிரபு சங்கரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இந்த பேரூராட்சியில் பஜாா் தெருவில் காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான கட்டட வளாகத்தில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை பொதுமக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மது அருந்த வருவோா், இப்பகுதி பொதுமக்களிடம் தகாத வாா்த்தைகள் பேசி வம்புக்கு வருகின்றனா். இதனால் அடிக்கடி குடியிருப்போருக்கும், மது பிரியா்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இது தொடா்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்த நிலையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடா்பாக கடந்த 20-ஆம் தேதி பொதுமக்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தினோம். ஆனாலும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதனால், இப்பகுதியில் உள்ள மதுக் கடையை அகற்றித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பரிசீலனை செய்து அரசு டாஸ்மாக் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com