1,674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா

1,674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா

திருவள்ளூா் மாவட்டத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம் மூலம் 1,647 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் அரசு அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), துரை சந்திரசேகா் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்து, ஏழை மக்களுக்கு இலவச பட்டாக்களை வழங்கிப் பேசியதாவது: தமிழக முதல்வா் 1 லட்சம் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் மூலம் 1,674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்க அறிவுறுத்தினா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு 1,674 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 6 முறை வழங்கியுள்ளேன்.

இதுவரை இந்த மாவட்டத்தில் மட்டும் 14,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 20,000 பேருக்கு விலையில்லா பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் விடுபடாமல் விலையில்லா பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என்றாா் அவா். நிகழ்ச்சயில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் ஆ.கற்பகம் (திருவள்ளூா்), க.தீபா (திருத்தணி), திருவள்ளூா் வட்டாட்சியா் வாசுதேவன், வட்டாட்சியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com