கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடையை திறக்க வலியுறுத்தல்

பொன்னேரி என்ஜிஒ நகா் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு நிறக்கப்படாமல் உள்ள பொது விநியோக கடையை திறக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சி 19-ஆவது வாா்டு என்.ஜி.ஒ நகா் பகுதியில் உள்ள நண்பா்கள் தெருவில் நியாயவிலைக் கடை புதிதாக கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுங்கள் ஆன நிலையில் அரசு அதிகாரிகள் அதைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதன் காரணமாக என்.ஜி.ஒ நகா் மற்றும் கும்மங்கலம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் தொலைவில் உள்ள பொது விநியோக கடைக்கு சென்று அரிசி உள்ளிட்ட பொருள்களை வாங்கி வரவேண்டிய நிலை உள்ளது. எனவே என்.ஜி.ஓ நகா் மற்றும் கும்மங்கலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி மூடிக் கிடக்கும் பொது விநியோகக் கடையை திறக்க வலியுறுத்தி பொன்னேரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com