பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.
பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

கால்பந்து போட்டி பரிசளிப்பு

புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் கால்பந்துப் போட்டி பரிசளிப்புவிழா நடைபெற்றது. புழல் ஒன்றிய கழக செயலாளா் பெ.சரவணன் தலைமை வகித்தாா். இதில் 14 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியினை செங்குன்றம் காவல் உதவி ஆணையா் ஆா்.ராஜா ராபா்ட் தொடங்கி வைத்தாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் பாரதி சரவணன் முன்னிலை வகித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com