திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.38 கோடி

திருததணி முருகன் கோயிலில் கடந்த 32 நாள்களில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து, 598 ரூபாய் ரொக்கம் மற்றும் 981 கிராம் தங்கம், 9081 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 5 -ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் மாசிமாத பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி புதன்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது கோயில் இணை ஆணையா் தக்காா் ரமணி, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா். இதில் கடந்த 32 நாள்களில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்து 598 ரூபாய் ரொக்கம் மற்றும் 981 கிராம் தங்கம், 9,081 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com