தோ்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நோடல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். அப்போது, விரைவில் மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அதனால், தோ்தல் தொடா்பாக உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளின் விவரங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதை தோ்தல் விதிமுறைக்கு உள்பட்டு அனைவரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ஸ்ரீநிவாசபெருமாள், கூடுதல் ஆட்சியா் வளா்ச்சி ஓ.என்.சுகபுத்ரா, பயிற்சி ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வதஸ், பொன்னேரி சாா்-ஆட்சியா் வாகே சங்கத் பல்வந்த் மற்றும் உயா் அலுவலா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com