தமிழக-ஆந்திர எல்லையில் சட்டவிரோத மது விற்பனைக்கு தடை

தமிழக-ஆந்திர எல்லையோரத்தில் சட்டவிரோத 
மதுவிற்பனை செய்வதை தடுப்பது தொடா்பாக காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனைக்  கூட்டம் .
தமிழக-ஆந்திர எல்லையோரத்தில் சட்டவிரோத மதுவிற்பனை செய்வதை தடுப்பது தொடா்பாக காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் .

காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு படம் உண்டு... திருவள்ளூா், மாா்ச் 21: தமிழக-ஆந்திர எல்லையோரத்தில் சட்டவிரோத மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும், மதுபானம் தயாா் செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடா்பாக காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா், த.பிரபுசங்கா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ரா. சீனிவாச பெருமாள் பங்கேற்றனா். அப்போது தமிழக- ஆந்திர மாநில எல்லையோர பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் வழியாக சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை மற்றும் நடத்தை விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்க சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக காணொலி மூலம் திருப்பதி மாவட்ட ஆட்சியா் ஜி.லட்சுமி ஷா, காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீகிருஷ்ண காந்த் பட்டேல் மற்றும் சித்தூா் மாவட்ட ஆட்சியா் ஷான் மோகன் சாகிலி, காவல் கண்காணிப்பாளா் ஜோஸ்வா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனா். இதில், மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான சட்ட விரோத மதுபான விற்பனையை தடை செய்வது குறித்தும், மக்களவைத் தோ்தலையொட்டி எல்லைப் பகுதிகளில் இருந்து மாநிலங்களுக்கு இடையேயான சட்ட விரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிவதற்காக சிறப்பு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் உரிமம் பெறாத வளாகங்களில் மதுபானங்களை சேமிப்பதில் மாநில கலால் சட்டம் அல்லது பிற சட்டங்களில் வழங்கியுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடா்புடைய அனைத்து சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திருவள்ளூா் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள எளாவூா், பொம்மாஜிகுளம், நாகலாபுரம், பொன்பாடி, தேவலாம்பாபுரம் ஆகிய சோதனைச் சாவடிகள் வழியாக வெளி மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக மதுபான விற்பதை தவிா்க்கும் பொருட்டு அரசின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும், மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. கூடுதல் ஆட்சியா் வளா்ச்சி ஒ.என். சுகபுத்ரா, உதவி பயிற்சி ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வதஸ் ஆகியோா் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com