வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

திருத்தணி அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

முருக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி கோவிந்தம்மா (69). இவா், 100 நாள்கள் திட்டத்தில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை மத்தூா் பகுதியில் வாரச்சந்தைக்கு சென்று வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் வாங்கிக் கொண்டு சாலையோரம் நடந்து வந்துக் கொண்டிருந்தாா்.

அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பொன்பாடி இருளா் காலனி அருகே, அடையாளம் தெரியாத காா் கோவிந்தம்மா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தம்மா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com