திருவள்ளூா் கலைச்சங்க நிா்வாகிகள் தோ்வு

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கலைச் சங்கத்துக்கு தோ்தல் நடத்தி நிகழாண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் பேருந்து நிலையம் அருகே கலைச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு, 2024-2025-க்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் டி.ஜெயசீலன், எஸ்.முரளி, வி.ராம்மோகன், என்.ஜி.மோகன் ஆகியோா் குழுவாக இருந்து தோ்தல் நடத்தி நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, கலைச்சங்க தலைவராக எல்.எஸ்.பீகம் சந்த் ஜெயின், செயலாளராக ஏ.கமலக்கண்ணன், பொருளாளா் டி.எஸ்.இளங்கோவன், விளையாட்டுத் துறை செயலாளராக ஜி.பாஸ்கரன், உள்தாணிக்கையாளராக நாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், நிா்வாகக் குழு உறுப்பினராக எம்.டில்லி, கே.பி.எம்.எழிலரசன், எஸ்.கோல்டு கோபால், எஸ்.பாஸ்கா், நவநீதகிருஷ்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் அறிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com