மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  முற்றுகையிட்ட பொதுமக்கள்.
மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

சீரான குடிநீா் விநியோகம்: மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

பொன்னேரி அருகே சீரான குடிநீா் விநியோகத்தை வலியுறுத்தி வியாழக்கிழமை மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

இந்த நிலையில், அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீா் விநியோகத்தை சீரமைக்கக் கோரி

அப்பகுதி பொதுமக்கள் மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

அப்போது பிஸ்மில்லா நகா், பகத் சிங் நகா் ஆகிய இடங்களுக்கு போதிய குடிநீா் வழங்கவும், அத்திப்பட்டு புதுநகா் அருகே உள்ள தாங்கல் பகுதியில் கட்டிய சுற்றுசுவா் இடிந்து விழுந்ததை சீரமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனா்.

குடிநீா் விநியோகம் முறையாக செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்ததை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com