சாலை விபத்தில் காயமடைந்த 
பேரூராட்சி தலைவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த பேரூராட்சி தலைவா் உயிரிழப்பு

திருவள்ளூா், மே 16: திருமழிசை அருகே சாலைத் தடுப்புச் சுவா் மீது மோதி காா் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திருமழிசை பேரூராட்சி தலைவா் உ.வடிவேல் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருமழிசை பகுதியைச் சோ்ந்தவா் உ.வடிவேல் (61) (படம்). திமுகவைச் சோ்ந்த இவா் திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்தாா்.

இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் அருகே வளா்புரத்தில் உள்ள மாந்தோட்டத்துக்கு காரில் சென்று திரும்பியபோது, மண்ணூா் கூட்டுச்சாலையில் சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி கவிழ்ந்தது. இதில் வடிவேல் பலத்த காயம் அடைந்தாா்.

காரில் உடன் பயணித்த அவரது சம்பந்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேல் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி சுமதி, மகன் பிரதீப் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com