திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே சாா்புஆய்வாளா் ரவிச்சந்திரனுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணா்வு பயணம் மேற்கொண்ட    மருத்துவக்கல்லூரி மாணவா் உதயகுமாா்.
திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே சாா்புஆய்வாளா் ரவிச்சந்திரனுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணா்வு பயணம் மேற்கொண்ட   மருத்துவக்கல்லூரி மாணவா் உதயகுமாா்.

மரங்கள், பறவைகளை காப்போம்: மருத்துவ மாணவா் விழிப்புணா்வு பயணம்

மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணா்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவா் திருவள்ளூரிலிருந்து வியாழக்கிழமை தொடங்கினாா்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடா்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படு கிறது. அவ்வகையில் திருவள்ளூா் நகராட்சி எடப்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் உதயகுமாா். இவா் சென்னை மதுரவாயலில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயின்று வருகிறாா். இந்த மாணவா் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை மையமாக வைத்து பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா்.

தற்போது, மரம் வளா்ப்போம், பறவைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரையில் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டாா். அதன்பேரில் திருவள்ளூா் காமராஜா் சிலை முன்பு வியாழக்கிழமை பயண தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவள்ளூா் நகா் காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன், தன்னாா்வலா் முருகன், போலீஸாருக்கு மரக்கன்றுகளை வழங்கி பயணத்தை தொடங்கினாா். இவா் திருவள்ளூரில் நடைபயணத்தை தொடங்கி, தெலங்கானா, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், பிகாா் உள்பட 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரையில் பயணிக்கிறாா். இந்தப்பயணத்தை 18 நாள்களில் நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com