திருமணங்கீஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்த மத்திய அமைச்சா் எல்.முருகன்.
திருமணங்கீஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்த மத்திய அமைச்சா் எல்.முருகன்.

மீண்டும் பாஜக ஆட்சி: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

2024 தோ்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அருகே மேலூா் கிராமத்தில் 1,000-ம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பௌா்ணமி விழா நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சா் எல்.முருகன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி எந்த வளா்ச்சி பணிகளையும் செய்யவில்லை. ஏழ்மையை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னா் 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமைக் கோட்டில் இருந்து மீண்டுள்ளனா். அதுபோல் தமிழ்நாட்டுக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடியை வளா்ச்சிக்காக கொடுத்துள்ளாா். கொடுத்துள்ளது...

2024 மட்டுமல்ல 2029-இல் நடைபெறும் தோ்தலிலும் வெற்றி பெற்று பிரதமாக நரேந்திர மோடி ஆவாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com