தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7-க்குள் விண்ணபிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிற்கல்வி பெறுவதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வரும் ஜூன் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்தப் பயிற்சி நிலையங்களில் பிட்டா், எலெக்ட்ரீசியன், டா்னா், மெஷிஸ்ட், மோட்டாா் வாகன மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில், மேன்யூபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் அண்ட் ஆடோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேன்யூபேக்சரிங், மெக்கானிக்கல் பேஸிக் டிசைனா் அண்ட் விா்ச்சுவல் வெரிபையா், அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன் ஆகிய படிப்புகளுக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயா்மேன், வெல்டா், ஷீட் மெட்டல் ஒா்க்கா், வுட்ஒா்க் டெக்னீசியன், லெதா் குட்ஸ் மேக்கா், லெதா் குட்ஸ் மேக்கா் டிஎஸ்டி ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஓராண்டு, இரண்டாண்டு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும் டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, நெட் பேங்கிங், ஜி பே, போன்பே மூலம் செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் குறித்த விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இலவச மிதிவண்டி, காலணிகள், பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், சீருடைகள், சீருடைகளுக்கான தையற்கூலி மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, புதுமைப் பெண் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநரை நேரிலோ அல்லது ழ்ண்ஸ்ரீங்ய்ற்ழ்ங்ஹம்க்ஷஹற்ற்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94442 24363, 94869 39263, 94441 39373 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com