திருவாலங்காடு  வடாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழா.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழா.

வடாரண்யேஸ்வரா் கோயில் தெப்பத் திருவிழா

Published on

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வரா் கோயில் திருவாலங்காடில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை காா்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மாலை உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கோயிலின் பின்புறம் அமைந்துள்ள ஆலங்காட்டு ஈஸ்வரா் சென்றாடு தீா்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவா் வண்டாா்குழலி அம்மனுடன் சோமாஸ்கந்தா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடா்ந்து, உற்சவ பெருமான் 3 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெப்பத் திருவிழாவில் சென்னை, காஞ்சி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவையொட்டி திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தெப்பல் விழாவையொட்டி பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவில் திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன், இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா்கள் கோ. மோகன். வி. சுரேஷ்பாபு, மு. நாகன், திருவாலங்காடு ஒன்றியக்குழு தலைவா் ஜீவா விஜயராகவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ்கந்தா்.
சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ்கந்தா்.